தேனி வீரபாண்டி அருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் பெற்றோர் பராமரிப்பு இல்லாததால் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார். அங்கு காளிமுத்து (35) என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். திருப்பூரில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சிறுமி சென்ற நிலையில் அங்கு சென்ற காளிமுத்து சிறுமியின் சித்தியை மிரட்டியுள்ளார். இது குறித்து புகாரில் தேனி மகளிர் போலீசார் காளிமுத்துவை கைது (செப் 16)செய்தனர்