தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு இருசக்கர வாகன பேரணி.

கரூரில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு இருசக்கர வாகன பேரணி விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன் பங்கேற்பு.;

Update: 2025-09-18 13:46 GMT
பரமத்திவேலூர்.,செப்.18: கரூரில் நடைபெற்ற தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் கலந்து  கொள்வதற்காக நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி தலைமையில் நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன் முன்னிலையில் 500-க்கும் மேற்பட்ட கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் பரமத்தியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பரமத்தி வேலூர் பஸ் நிலையம் வழியாக பரமத்திவேலூர் அண்ணா சாலைக்கு வந்தடைந்தனர்.  அதனைத்தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைே தொடர்ந்து பரமத்திவேலூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கரூர் அருகே உள்ள கோடங்கிப்பட்டியில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டனர். இதில் வேலூர் பேரூர் கழக செயலாளர் முருகன்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பூக்கடை சுந்தர்,நவலடி ராஜா,பரமத்தி வேலூர் பேரூர் தி.மு.க. அவைத்தலைவர் மதியழகன், பேரூராட்சித் துணை தலைவர் ராஜா, வாழை தினேஷ் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை தி.மு.க. பொறுப்பாளர்கள் இளைஞர்கள் உட்பட பலர் கொண்டனர்.

Similar News