கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி!
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் இன்று பரிசுகள் வழங்கி பாராட்டினார்.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பாதுகாப்பாக தலைகவசம் அணிந்து செல்ல வேண்டுமென்றும், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, கல்லூரியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இங்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் இன்று பரிசுகள் வழங்கி பாராட்டினார்.