குடியாத்தம் காவல் நிலையத்தில் நூலகம் திறப்பு!
ஆக்சிஜன் செறிவூட்டும் அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் இன்று திறந்து வைத்தார்.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் போக்குவரத்து காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நூலகம் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டும் அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் இன்று (செப்டம்பர் 19) திறந்து வைத்தார். மேலும் நுாலகத்திற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கியவர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்து கொண்டார். இதில் குடியாத்தம் டிஎஸ்பி சுரேஷ், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.