காரையூர்: குப்பைகளால் நோய்த்தொற்று அபாயம்!

பொது பிரச்சனைகள்;

Update: 2025-09-21 03:06 GMT
பொன்னமராவதி அடுத்த காரையூர் சாலையோரம் அதிக அளவில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோர குப்பைகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News