திருமயம் அருகே உள்ள விராச்சிலையில் சாலையில் அதிக அளவில் தெரு நாய்கள் திரிந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையில் நாய் குறுக்கே வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழும் சூழல் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.