புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அரசர்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை தொடங்கி கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த சூழலில் தற்போது பெய்து வரும் மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.