தர்மபுரியில் பல்வேறு பகுதியில் அதிகாலையில் கனமழை
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் அதிகாலை முதலே கொட்டி தீர்க்கும் கனமழை;
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் தர்மபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு ஒரு சில பகுதிகளில் மழை பொழிந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே நல்லம்பள்ளி, தொப்பூர், பொம்மிடி, பாலக்கோடு, காரிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையும் ஒரு சில பகுதிகளில் சாரல் மழையும் பொழிந்து வருகிறது.