கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் அருகே வயலூர் நடுப்பட்டி சாலையில் கழுவூரான் தோட்டம் அருகே உள்ள சீத்தகாட்டில் அரசு அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் சேவல் சண்டை நடத்திய காதப்பறையை சேர்ந்த பழனிவேல், வாத்தி கவுண்டனூரைச் சேர்ந்த தர்மராஜன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 6 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.