கரூர்-மணல் கொள்ளை- வீடியோ ஆதாரத்துடன் எஸ்பி- இடம் மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் புகார்.

கரூர்-மணல் கொள்ளை- வீடியோ ஆதாரத்துடன் எஸ்பி- இடம் மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் புகார்.;

Update: 2025-09-23 07:45 GMT
கரூர்-மணல் கொள்ளை- வீடியோ ஆதாரத்துடன் எஸ்பி- இடம் மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் புகார். கரூர் காவிரி ஆற்றில் மணல் அள்ள நீதிமன்றம் தடை விதித்தது. ஆயினும் ஆளும் கட்சியினர் அதிகாரிகள் ஆதரவுடன் காவிரி ஆற்றில் குறிப்பாக திரு முக்கூடலூர் பகுதியில் பட்டா நிலங்களில் உள்ளே நுழைந்து நாள்தோறும் பல லட்ச ரூபாய் மதிப்பில் இரவு நேரத்தில் கனரக வாகனங்களில் மணல் கொள்ளை நடத்தி வருகின்றனர். இது குறித்து இன்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் செல்ல.ராஜாமணி தலைமையில் சங்க நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து மணல் கொள்ளை நடப்பது தொடர்பான வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

Similar News