மணல் கொள்ளையை தடுக்காவிட்டால் முற்றுகை போராட்டம்.செல்ல. ராஜாமணி கரூரில் பேட்டி.
மணல் கொள்ளையை தடுக்காவிட்டால் முற்றுகை போராட்டம்.செல்ல. ராஜாமணி கரூரில் பேட்டி.;
மணல் கொள்ளையை தடுக்காவிட்டால் முற்றுகை போராட்டம்.செல்ல. ராஜாமணி கரூரில் பேட்டி. கரூரில் நடைபெற்று வரும் மணல் கொள்ளை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் செல்ல. ராஜாமணி இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, கரூர் காவிரி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளை குறித்து மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை , முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாள் ஒன்றுக்கு 50- லட்சம் ரூபாய் மதிப்பில் மணல் கொள்ளை நடப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆளும் கட்சி ஆதரவில் நடைபெறும் இந்த மணல் கொள்ளை குறித்து தட்டி கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர். செப்டம்பர் 30ம் தேதிக்குள் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால் கிராம மக்களையும் பத்திரிகையாளர்களையும் மணல் கொள்ளை நடைபெறும் இடத்திற்கு இரவு நேரத்தில் அழைத்துச் சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி அது தொடர்பாக முதலமைச்சரிடம் புகார் அளிக்க போவதாக அவர் தெரிவித்தார். கரூர் எஸ்பி புகாரை பெற்றுக் கொண்டு, அதற்கான வாய்ப்பு இல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை நாங்கள் நம்புகிறோம் எனவும் தெரிவித்தார். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிடில் 30ஆம் தேதி திட்டமிட்டபடி முற்றுகை போராட்டம் நடைபெறும் அதற்கு பாதுகாப்பு கேட்டு எஸ்பிபி இடம் மனு அளித்ததாக தெரிவித்தார்.