பஞ்சமாதேவி-காரை மறித்து தங்க நகை பறித்த மூன்று பேர் கைது.

பஞ்சமாதேவி-காரை மறித்து தங்க நகை பறித்த மூன்று பேர் கைது.;

Update: 2025-09-23 13:14 GMT
பஞ்சமாதேவி-காரை மறித்து தங்க நகை பறித்த மூன்று பேர் கைது. கரூர் மாவட்டம் வெங்கமேடு காவல் எல்லைக்குட்பட்ட பஞ்சமாதேவி - மின்னாம்பள்ளி சாலையில் சனிக்கிழமை இரவு காரில் இரண்டு பேர் சென்றபோது அவர்களை பின் தொடர்ந்து 3- பேர் சென்றவர்கள், காரை இடைமறித்து காரில் வந்தவர்கள் அணிந்திருந்த வைரக்கல் பதித்த தங்க செயின்,மற்றொரு தங்கச் செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மூவரும் தலைமறைவானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் பஞ்சமாதேவியை சேர்ந்த சூர்யா வயது 29 வினோத் வயது 25 ஆத்தூர் பிரிவு சாலையை சேர்ந்த மோகன்ராஜ் வயது 25 ஆகியோர் தங்க நகைகளை பறித்தது தெரியவந்ததை தொடர்ந்து மூன்று பேரையும் வெங்கமேடு காவல்துறையினர் கைது செய்தனர்.

Similar News