கரூர் -வெல்டிங் வைக்கும் போது திடீர் தீ விபத்து.தீயை அணைத்த வீரர்கள்.
கரூர் -வெல்டிங் வைக்கும் போது திடீர் தீ விபத்து.தீயை அணைத்த வீரர்கள்.;
கரூர் -வெல்டிங் வைக்கும் போது திடீர் தீ விபத்து.தீயை அணைத்த வீரர்கள். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் காலியாக இருந்த பெயிண்ட் அடிக்கும் இடத்தில் இருந்து புகைபோக்கியில் வெல்டிங் அடிக்கும் பணியில் நேற்று மாலை ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக தீப்பொறி பறந்து அதன் மேற்கூரையில் போடப்பட்ட பிளாஸ்டிக் ஓடு மற்றும் புகை போக்கியில் தீ பிடித்து புகை வரத் தொடங்கியது. இதனை பார்த்த ஊழியர்கள் வெல்டிங்கை நிறுத்தி விட்டு குடத்தில் தண்ணீர் எடுத்து அதனை அணைக்க முற்பட்டனர். ஆனால், அதற்குள் தீ மளமளவென பரவி புகை அதிகளவில் வெளியேறியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியை சுற்றி இருந்த பேட்டரி கடைகள், கேஸ் பங்க், ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.