ஆத்தூர் பிரிவு- டூவீலரில் சென்றவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து.

ஆத்தூர் பிரிவு- டூவீலரில் சென்றவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து.;

Update: 2025-09-24 12:30 GMT
ஆத்தூர் பிரிவு- டூவீலரில் சென்றவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எல்பிஜி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் வயது 45 இவர் திங்கட்கிழமை அன்று அதிகாலை 5.45 மணியளவில் கரூர்-ஈரோடு சாலையில் ஆத்தூர் பிரிவு பகுதியில் உள்ள தனியார் மகால் அருகே டூவீலரில் சென்றார். அப்போது அதே சாலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி மான்கரடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் வயது 53 என்பவர் வேகமாக ஓட்டி வந்த அரசு பேருந்து செந்தில்நாதன் டூவீலரில் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது, இதில் பலத்த காயமடைந்த அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக செந்தில்நாதன் அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய வெங்கடேசன் மீது கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News