செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த எம் எல் ஏ

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த எம் எல் ஏ;

Update: 2025-09-25 04:35 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுகளத்தூர், எல்.எண்டதூர், கள்ளபிரான்புரம், பொற்பரங்கரணை மற்றும் மேலும் பல பகுதிகளில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது அப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு திட்டத்தின் கீழ் வீடு வழங்குதல், தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு அடைவதை தடுப்பது குறித்து நடவடிக்கை எடுப்பது, சிமெண்ட் சாலை அமைப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை எம் எல் ஏ முன் வைத்தனர். அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் சினேகா அவர்களை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Similar News