திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை உலக ரட்சகர் திருத்தலத்தின் 141ஆம் ஆண்டு பெருவிழா நாளை மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வருகின்ற செப்டம்பர் 27-அக்டோபர் 5ஆம் தேதி வரை திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், சப்பரபவனி நடக்கிறது. அக்டோபர் 5ஆம் தேதி பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் பெருவிழா திருப்பலி, திருமுழுக்கு, சப்பரபவனி, நற்கருணை ஆசீர் நடக்கிறது. தொடர்ந்து நன்றி திருப்பலி, கொடியிறக்கம், அசன விருந்தும் நடைபெறும்.