விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழிப்புணர்வு
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழிப்புணர்வு;
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பில் "கல்பாக்கம் அணுசக்தி துறையால் ஆபத்து நமக்கு, கல்பாக்கம் நிர்வாகத்தில் வேலைவாய்ப்பு யாருக்கு ?" என்ற தலைப்பில் செங்கல்பட்டு மாவட்டம்,கல்பாக்கம் சுற்றுவட்டார அணைத்து கட்சி தோழமைகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், மாவட்ட செயலாளர் தமிழினி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களும், தோழமை கட்சிகளின் முன்னணி மாவட்ட பொறுப்பாளர்களும் இணைந்து, துண்டறிக்கை விநியோகம் செய்து கல்பாக்கம் சுற்றுவட்டார மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.