திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 63 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.