தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநகர் மாநாடு
தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநகர் மாநாடு பிச்சாண்டி மஹாலில் நடைபெற்றது;
திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநகர கிளை மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகர கிளை தலைவர் வைத்தியலிங்க பூபதி தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் கவிஞர் ரேவதி முகில், மாவட்ட குழு உறுப்பினர் மணிவண்ணன், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம் தொடக்க உரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் நிறைவுறை வழங்கினார். மாநாட்டில், ஓவியர் தமிழ் பித்தன் வரைந்த ஓவிய கண்காட்சி மற்றும் கவிதை, இசை, நடனம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சங்க நிர்வாகி அமானுல்லா நன்றி கூறினார்.