கோவை விமான நிலையத்தில் ஹேமாமாலினி பேட்டி !

அறிக்கை பிரதமர், பாஜக தலைவர், உச்சநீதிமன்றம், சிபிஐ – அனைவரிடமும் வழங்கப்படும் என ஹேமாமாலினி கருத்து.;

Update: 2025-10-01 08:09 GMT
கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான ஆய்வுக்குப் பின், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த NDA ஆய்வு குழுத் தலைவர் மற்றும் நடிகை ஹேமாமாலினி, “ஆய்வு குறித்து ஏற்கனவே விரிவாக கூறியுள்ளோம். எங்களது அறிக்கையை பிரதமர், பாஜக தலைவர் நட்டா ஆகியோருக்கும் வழங்க உள்ளோம். மேலும் உச்சநீதிமன்றம், சிபிஐ ஆகிய இடங்களுக்கும் அளிக்க திட்டமிட்டுள்ளோம். நாங்கள் விசாரித்தபடி, சிறிய இடத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எங்கு கூட்டம் நடந்தாலும் பாதுகாப்பு முறைகள் உறுதியாக இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார். விஜய் வெளியிட்டுள்ள வீடியோ குறித்த கேள்விக்கு, மற்றவர்களை விடுத்து என் மீது நடவடிக்கை எடுங்கள் என அவர் கூறியது வரவேற்கத்தக்கது என கூறினார்.

Similar News