கோவை: பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - அனுராக் தாக்கூர் !
கரூரில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் விசாரணையை சிபிஐ வசம் கொடுக்க வேண்டும் என அனுராக் கூறினார்.;
கரூர் சென்று ஆய்வு செய்து கோவை திரும்பிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கியவர் யார்? எத்தனை காவல்துறையினர் பணியில் ஈடுபட்டனர்? பல கேள்விகள் பதில் அளிக்கப்படாதவையாக உள்ளன. சமூக வலைத்தளங்களில் மக்களின் குரலை அரசு அடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது” என குற்றம்சாட்டினார். மேலும், வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரணைக்குக் கொடுக்கலாம் என்றும், நீதிபதி தலைமையிலான விசாரணை மட்டுமே மக்கள் நம்பிக்கையை பெறும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் மத்திய அமைச்சகத்திற்கும் பிரதமருக்கும் இந்த வார இறுதிக்குள் அனுப்பப்படும் எனவும், ஒரே நபர் ஆணையம் போதாது, மக்கள் அதிருப்தியுடன் இருப்பதாகவும் குழுவினர் குறிப்பிட்டனர்.