பேரூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர் கைது !

5.5 கிலோ கஞ்சா பறிமுதல் – குற்றவாளி சந்தோஷ்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update: 2025-10-02 10:55 GMT
கோவை, பேரூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் @ சந்தோஷ் @ பூரன் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 5.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பொது ஒழுங்கு மற்றும் சுகாதாரத்துக்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டதால், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர், அவர்மீது குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகித்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News