கோவை: விஜயதசமி - ஈஷா வளாகத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் !
பழங்குடியின குழந்தைகள் மற்றும் மக்கள் கலந்து கொண்ட சிறப்புப் பாரம்பரிய நிகழ்ச்சி.;
விஜயதசமி முன்னிட்டு ஈஷா யோகா மையம், லிங்கபைரவி வளாகத்தில் நேற்று (02.10.25) நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. முள்ளங்காடு, தானிக்கண்டி, பட்டியார்கோவில்பதி, மடக்காடு உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களிலிருந்தும் குழந்தைகள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி ஆதியோகி, தியானலிங்கம் தரிசனத்திற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஈஷாவிற்கு வந்தனர். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கான விழிப்புணர்வு, ஊட்டச்சத்து உதவி, வளையகாப்பு நிகழ்ச்சி, இலவச கல்வி மற்றும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல சமூகப்பணிகள் ஈஷா அறக்கட்டளையால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.