கோவை செளடாம்பிகை அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் கத்தி போட்டு நேர்த்திக் கடன் !

வேஸ்கோ, தீஸ்கோ கோஷங்களுடன் கத்தி போடும் பாராக் ஊர்வலம் – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு.;

Update: 2025-10-03 04:38 GMT
கோவை ராஜவீதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலின் நவராத்திரி திருவிழா நிறைவையொட்டி, நேற்று பாராக் கத்தி ஊர்வலம் நடைபெற்றது. ஆர்.எஸ்.புரத்தில் கலச வழிபாட்டுடன் தொடங்கிய ஊர்வலத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கைகளில் கத்தி கீறி, ரத்தம் சொட்டச் சொட்ட ‘வேஸ்கோ, தீஸ்கோ’ கோஷங்களுடன் அம்மனை துதி செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்த அற்புத காட்சியை காண ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.

Similar News