அன்னூர் மதுர காளியம்மன் கோவிலில் நடிகர் சிவகுமார் குடும்பம் தரிசனம் – பக்தர்கள் உற்சாகம் !
கும்பாபிஷேக மண்டல பூஜையில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர்.;
கோவை மாவட்டம் அன்னூர் லக்கேபாளையம் மதுர காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடைபெற்று வரும் 48 நாட்கள் மண்டல பூஜையில் நடிகர் சிவகுமார், அவரது மனைவி, நடிகர் கார்த்திக் ஆகியோர் நேற்று கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள், பொதுமக்கள் அவர்களுடன் செல்பி எடுத்து, புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்தனர்.