மத்தூர் அருகே கார் மோதி இன்ஜினியர் உயிரிழப்பு

மத்தூர் அருகே கார் மோதி இன்ஜினியர் உயிரிழப்பு.;

Update: 2025-10-09 03:17 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பெரிய ஜோகிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மகன் மோகன் (31)இவர் பெங்களூரில் கம்பெனியில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியற்றி வருகிறார். இதே பகுதியை சேர்ந்த மோகன் நண்பர் மாதேஷ் மகன் எழில்(22) ஆகிய இரண்டு பேரும் மத்தூரில் இருந்து பெரிய ஜோகிப்பட்டிக்கு டூவீலரில் சென்றனர். அப்போது திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரே வந்த கார் இவர்கள் சென்ற டூவீலர் மீது மோதியது இதில் மோகன் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்த தகவல் அறிந்து வந்த மத்தூர் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News