கோவை விமான நிலையத்தில் பரபரப்பு : தி.மு.க அமைச்சர்களை பார்த்த அ.தி.மு.க வினர் எடப்பாடியார் வாழ்க கோஷம் !
அ.தி.மு.க வினரின் கோஷத்தால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு.;
Lஅ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” பிரச்சாரத்துக்காக நேற்று மாலை கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவரை வரவேற்க திரண்டிருந்த அ.தி.மு.க வினர், அதே நேரத்தில் மாநில அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பரசன், காந்தி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததை கண்டனர். இதையடுத்து அ.தி.மு.க வினர் “எடப்பாடியார் வாழ்க”, “அ.தி.மு.க வாழ்க”, “கோவை கோட்டை எங்களது” என கோஷமிட்டனர். இதனால் விமான நிலைய வளாகத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.