கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை திடீர் சந்திப்பு !

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை கைகுலுக்கி சந்திப்பு.;

Update: 2025-10-10 07:15 GMT
கோவையில் நடைபெற்ற புத்தொழில் மாநாடு, அவிநாசி சாலை மேம்பாலம் மற்றும் தங்க நகை தொழில் பூங்கா தொடக்க விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அதே நேரத்தில் சென்னை செல்ல வந்த பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைவும் அங்கு வந்திருந்தார். இதையடுத்து இருவரும் விமான நிலையத்தில் சந்தித்து பரஸ்பரம் உடல்நிலை விசாரித்து கைகுலுக்கி மரியாதை பரிமாறிக் கொண்டனர். நேற்று இதே விமான நிலையத்தில் வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அ.தி.மு.க. தொண்டர்கள் “எடப்பாடியார் வாழ்க” என கோஷம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Similar News