சூலூர் அருகே திடீர் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி !

Update: 2025-10-10 07:16 GMT
கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி, சோமனூர், கணியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. சில நாட்களாக வறட்சியால் அவதிப்பட்டிருந்த இந்தப் பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பத்திலிருந்து நிம்மதி கிடைத்துள்ளது. திடீர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து சில இடங்களில் மந்தமானது. அதே நேரத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மழை பெய்ததில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Similar News