கிணற்றில் விழுந்த மாடு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர் !
திடீர் சம்பவம் – கிரேன் உதவியுடன் கிணற்றில் விழுந்த மாடு மீட்பு.;
கோயம்புத்தூர் மாவட்டம் தொம்பிளிபாளையம் கிராமத்தில் மாடு ஒன்று கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து நேற்று மதியம் 12.12 மணியளவில் தகவல் வந்ததையடுத்து, தொண்டாமுத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கிரேன் உதவியுடன் மாட்டை உயிருடன் மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கை உள்ளூர் மக்களால் பாராட்டப்பட்டது.