கோவை: குப்பை குவியல், மின்விளக்குகள் பழுதாகி மக்கள் அவதி
சுகாதார சீர்கேடு மற்றும் மின்விளக்குகள் பழுதால் இரவு நேரத்தில் பொதுமக்கள் அவதி.;
மேட்டுப்பாளையம் அருகே துடியலூர் பகுதியில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சியின் மாருதி நகர் பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும், மயானப் பகுதியில் கூட குப்பைகள் கொட்டப்படுவதால் உடல் புதைக்கும் இடமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை சீராக அகற்றுவதில்லை. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சோலார் மின்விளக்குகள் பல ஆண்டுகளாக பழுதாக கிடக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் விபத்துகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாவட்ட நிர்வாகம் இதை அவசரமாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடத்துள்ளனர்.