வேலம்பட்டியில் நாளை 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்
வேலம்பட்டியில் நாளை 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்;
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் நாளை அக்.11-ல் காலை 9 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ரத்த பரிசோதனை மற்றும் கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை,இசிஜி, எக்ஸ்ரே, எக்கோ, அல்ட்ரா சவுண்டு மற்றும் கண் பரிசோதனை உள்ளிட்ட 17 வகையான சிறப்பு நிபுணா்களைக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளார்