ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-10-11 07:35 GMT
ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் வருடம் தோறும் 6 சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டு இன்று தமிழக முழுவதும் நடைபெற்றது. தமிழக முழுவதும் இன்று 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராம சபை கூட்டங்களை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரடியாக முன் நின்று நடத்தினார். இந்த கூட்டத்தின் போது தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து ஒவ்வொரு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய பொறுப்பாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் அந்தந்த கிராமங்களில் உள்ள குறைகள் குறித்தும் குறிப்பிடுமாறு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குறைகள் குறித்து காணொளியில் குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் இருந்து பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 16 பொருட்கள் விவாதத்திற்கு கொண்டு வந்து தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டாங் கோவில் மேற்கு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் பெரியசாமி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதலமைச்சர் காணொளி வாயிலாக நடத்திய கிராம சபை கூட்டத்திற்கு பிறகு பல்வேறு தீர்மானங்கள் இந்த ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டது.

Similar News