சூளகிரி அருகே கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு.
சூளகிரி அருகே கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு.;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உரையாற்றியதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், இம்மிடிநாயக்கனப்பள்ளி கிராமத்தில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன் உள்ளிட்ட பலர் உள்ளனர்