தம்ம நாயக்கன்பட்டியில் தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்ட பெண் உயிரிழப்பு.
தம்ம நாயக்கன்பட்டியில் தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்ட பெண் உயிரிழப்பு.;
தம்ம நாயக்கன்பட்டியில் தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்ட பெண் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்மநாயக்கன்பட்டி அருகே திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன காளை மனைவி வெள்ளதாயி வயது 45. இவருக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு கடந்த எட்டு வருடங்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆயினும் அவருக்கு குணமாகவில்லை இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாகவே நோயின் தாக்கம் தீவிரம் அடைந்தது. இதனால் வெள்ளத்தாயை வெள்ளிக்கிழமை அன்று கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். நேற்று மருத்துவர்கள் வெள்ளத்தாயை பரிசோதித்து அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளத்தாயின் மகன் ராஜேஷ்வரன் வயது 23 என்பவர் அளித்த புகாரின் பேரில் வெள்ளியணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.