தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தல் படி, பனை விதைகள் இயக்கம் சார்பில், மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதல் படி குமாரபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள ஏரி மற்றும் ஆற்றுப்படுகைகளில் 1500 பனை விதைகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முதல் கட்டமாக எடப்பாடி ரோடு முராசு குட்டை ஏரி பகுதிகளில் சுமார் 700 க்கும் மேற்பட்ட பனை விதை நடும் பணிகளை நகராட்சி தலைவர், வடக்கு நகர தி.மு.க. பொறுப்பாளர் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் ரமேஷ் அவர்கள், நகர மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன் அவர்கள், மற்றும் நகரமைப்பு ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள், நகர மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் சித்ரா, உஷா, மல்லிகா, உள்ளிட்ட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.