பிரபல காப்பீடு நிறுவன பெயரில் போலி பாலிசி போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் பிரபல காப்பீடு நிறுவன பெயரில் போலி பாலிசி வழங்கியது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;
பஜாஜ் அலையன்ஸ் ஜெனெரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில், பொது காப்பீடு துறை செயல்பட்டு வருகிறது என்று,, 2021 பிப் 16ல், பவானியில் உள்ள ஒரு நிறுவனத்திடம், பஜாஜ் காப்பீடு நிறுவனத்திற்கு எதிராக டி.என்.52 சி 8519 என்ற வாகனத்திற்கு, மோட்டார் விபத்து கோரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் படி குமாரபாளையம் அருகே சாமியம்பாளையம் அருண்குமாருக்கு 2019, அக் 19 முதல் 2020, அக் 11 வரை காப்பீடு காலத்தை உள்ளடக்கிய டி.என்.52 சி 8519 என்ற வாகனத்திற்கு அத்தைகைய பாலிசி எதுவும் வழங்கப்படவில்லை என கண்டறியப்பட்டது. இது போலியான ஆவணம் என்றும், பாலிசியை போலியாக உருவாக்கி பணம் பெற முயற்சித்த, அருண்குமார், 39, என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை பஜாஜ் நிறுவன நிர்வாகி சதீஸ், குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.