கழிப்படத்தை திறக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம் உடையார்பேட்டை ஆண்கள் பெண்கள் கழிப்படத்தை திறக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2025-10-17 13:08 GMT
குமாரபாளையம் உடையார்பேட்டை ஆண்கள் பெண்கள் கழிப்படத்தை திறக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒரு வருடத்திற்கு மேலாக பராமரிப்புக்காக பூட்டப்பட்ட குமாரபாளையம் உடையார்பேட்டை ஆண்கள் பெண்கள் கழிப்படத்தை நகராட்சி நிர்வாகம் உடனடியாக திறக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கிளை நிர்வாகி சக்திவேல் தலைமையில் 16 10 2025 கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் போடப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், நகர குழு செயலாளர் கந்தசாமி, முன்னாள் நகரகுழு செயலாளர் ஆறுமுகம், நகரக் குழு உறுப்பினர்கள் ஜனார்த்தனன், மோகன், சண்முகம், விசைத்தறி சங்க நகர செயலாளர் வெங்கடேசன், காட்டூர் கிளை செயலாளர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News