பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு சீருடை, வழங்கிய பாசம் அமைப்பினர்

குமாரபாளையம் பாசம் ஆதரவற்றோர் மையம் சார்பில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு சீருடை, இனிப்பு, பட்டாசு வழங்கினர்.;

Update: 2025-10-18 16:31 GMT
குமாரபாளையம் பாசம் ஆதரவற்றோர் மையம் சார்பில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு சீருடை, இனிப்பு, பட்டாசு வழங்கும் நிகழ்வு அமைப்பாளர் குமார் தலைமையில் நடந்தது. குழந்தைகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அவர்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். அதைக்கண்ட மையத்தில் உள்ள முதியவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கைதட்டி பாராட்டினர். இதில் மைய நிர்வாகி தீபா, பத்மா, முருகேஷ், பிரசன்னா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News