லாரி மோதி வாலிபர் பலி
மதுரை திருமங்கலம் அருகே நேற்று இரவு லாரி மோதி வாலிபர் பலியானார்.;
மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி ஒத்த வீட்டை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித் குமார் (23) என்பவர் நேற்று (அக்.18) இரவு விருதுநகர் திண்டுக்கல் நான்கு வழி சாலையில் பல்சர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவ்வழியே வந்த லாரி மோதியதில் தலையில் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டு வினோத் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் போலீசார் லாரி டிரைவர் கர்நாடகாவை சேர்ந்த சங்கர்( 33) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.