அரசு பேருந்து மோதியதில் வாலிபர் பலி.
மதுரை உசிலம்பட்டி அருகே அரசு பேருந்து மோதியதில் வாலிபர் பலியானார்;
மதுரை உசிலம்பட்டி கருமாத்தூர் ஒத்தபட்டியை சேர்ந்த பாலமுருகனின் மகன் ஈஸ்வரன்( 30) என்பவர் நேற்று முன்தினம் (அக்.17) இரவு மதுரை தேனி மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேனியை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் பெருமாள்( 58) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.