வேன் மோதி வாலிபர் பலி.
மதுரை திருமங்கலம் அருகே நடந்து சென்ற வாலிபர் மீது வேன் மோதியதில் பலியானார்.;
மதுரை திருமங்கலம் திரளி அக்ரஹார தெருவை சேர்ந்த சேஷாத்திரியின் மகன் திருமலை( 50) என்பவர் நேற்று முன்தினம் (அக்.18) இரவு ஆலம்பட்டிலிருந்து சேடப்பட்டி செல்லும் சாலையில் அச்சம்பட்டி சிஎஸ்சி தோட்டம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வேன் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு காது வழியாக ரத்தம் வெளியே வந்த நிலையில் அங்கிருந்தவர்கள் இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் வழியிலேயே உயிரிழந்தார். இவரது தாயார் தாயார் பத்மாவதி திருமங்கலம் தாலூகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பேரையூர் கோட்டைப்பட்டியை சேர்ந்த காளை என்ற வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.