கந்த சஷ்டி விரதம் தொடக்கம்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணி சாமி கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா அரோகரா கோஷத்துடன் தொடங்கியது;
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ( அக்.22) காலை கந்த சஷ்டி விழா அரோகரா கோஷத்துடன் சண்முகர், வள்ளி, தெய்வானை, பின்பு உற்சவர் சுப்பிரமணி சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்ட பின்பு நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினார்கள். தினமும் நடைபெறும் பூஜைகளை காண்பதற்கு பெரிய அளவிலான திரைகளை அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சரவண பொய்கை பகுதியில் தீயணைப்புத் துணியினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.