கிருஷ்ணகிரி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

கிருஷ்ணகிரி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.;

Update: 2025-10-24 03:18 GMT
கிருஷ்ணகிரி அருகே உள்ள மகராஜகடை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (25) இரும்பு கதவுகள் தயாரிக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 21-ஆம் தேதி அன்று கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த இது குறித்து மகராஜகடை போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News