காவிரி வெள்ள பாதிப்பு குறித்து பார்வையிட்ட (பொ) ஆர்.டி.ஒ

குமாரபாளையம் பகுதியில் காவிரி வெள்ள பாதிப்பு குறித்து (பொ) ஆர்.டி.ஒ. நேரில் பார்வையிட்டார்.;

Update: 2025-10-24 14:32 GMT
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 கன அடியை எட்டியுள்ளது இதனை அடுத்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ள 55ஆயிரம் கன அடி நீரானது 16 கண் மதகு வழியாக காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. காவிரி கரையோர பகுதி பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்கவைக்க வருவாய்த் துறையினர் பாதுகாப்பு முகாம்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். குமாரபாளையத்தில் கலைமகள் வீதி, அண்ணாநகர், மணிமேகலை வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காவேரி வெள்ள நீர் பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நகராட்சி திருமண மண்டபத்திலும், புத்தர் தெரு அரசு உயர்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க ஆட்கள் தயார் நிலையில் உள்ளனர். காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளில் தயார் நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உள்ளனர்.குமாரபாளையம் பகுதியில் காவிரி வெள்ள பாதிப்பு குறித்து (பொ) ஆர்.டி.ஒ.வும், மாவட்ட கலால் துறை உதவி ஆணையருமான ராஜேஷ், நேரில் பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினார். தாசில்தார் பிரகாஷ், ஆர்.ஐ. புவனேஸ்வரி, வி.ஏ.ஓ. முருகன், உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Similar News