பழமையான கோவிலுக்கு சாலை அமைக்கும் பணி தீவிரம்

மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பழமையான கோவிலுக்கு செல்வதற்கு புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது;

Update: 2025-10-25 13:44 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியில் அமைந்துள்ளது சித்த நவனான் வகையாறாவிற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் திருக்கோவில் சுமார் 300 ஆண்டு கால பழமை வாய்ந்தது. இந்த கோவிலுக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாத சூழலில், கிராம மக்கள் மற்றும் கோவில் கமிட்டியினர் சாலை வசதி அமைத்து தர வருவாய்த்துறை அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தனர். இந்நிலையில் வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாலை அமைக்க தேவையான இடங்களை ஆய்வு செய்தனர்.

Similar News