அரசு கல்லூரியில் கலைத்திருவிழாவின் நிறைவு விழா
குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் கலைத்திருவிழாவின் நிறைவு விழா நடந்தது.;
குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் கலைத்திருவிழாவின் நிறைவு விழா முதல்வர் அருணாசலம் தலைமையில் நடந்தது. முதல்வர் பேசியதாவது: ஆசிரியர்கள், மாணாக்கர்களுக்கு கலை, ,இலக்கியம், இசை, படைப்பாற்றல், சிதனைத் திறன், மற்றும் ஆளுமைப்பண்பு போன்றவைகளை வளர்த்துக்கொள்வதற்கான அடித்தளமாக இந்த கலைத்திருவிழா அமைந்தது என்றால் மிகையில்லை. சிறப்பு விருந்தினர் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் நளினி பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உதவி பேராசிரியை சாய்லீலா நன்றி கூறினார்.