புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண் கைது.

கீரம்பூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-10-29 13:07 GMT
பரமத்தி வேலூர், அக்.29: நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துவருவதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், பரமத்தி காவல் உதவி ஆய்வாளர் ராசப்பன் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அதில், அங்குள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், அதை விற்பனை செய்த நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே உள்ள புலவர்பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பூர்ணம் (42) மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News