கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாதேஸ்வரன் எம்.பி.,முன்னாள் எம்.எல்.ஏ.கே.எஸ்.மூர்த்தி பங்கேற்பு.;

Update: 2025-11-01 13:31 GMT
பரமத்திவேலூர்,நவ.1: பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் கோரிக்கை மனுக்களை கொடுத்த பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து தகுதியான மனு தாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கபிலர்மலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு கோட்டாட்சியர் லெனின் தலைமை வகித்தார். கபிலர்மலை வடக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் தளபதி சுப்பிரமணியம், கபிலர்மலை மத்திய ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் வக்கீல் சரவணகுமார்,கபிலர்மலை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சாமிநாதன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், பரமத்தி வேலூர் தாசில்தார் கோவிந்தசாமி பரமத்தி வேலூர் சமூக பாதுகாப்பு துறை தாசில்தார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள்,சார்புஅணி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News