பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.;
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பள்ளிபாளையம் எஸ்.பி.பி பேப்பர் மில்லில் தடையின்மை சான்று வழங்குதல் தொடர்பாக, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், தட்டாங்குட்டை ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.21.55 இலட்சம் மதிப்பீட்டில் இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைத்து, உரம் தயாரிக்கும் பணியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.அதனைத் தொடர்ந்து, குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், குமாரபாளையம் ஊராட்சி ஒன்றியம், தட்டாங்குட்டை ஊராட்சி, ஓலப்பாளையம் மயானத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் (05.11.2025) திறந்து வைக்கப்படவுள்ள, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.